ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க தீர்மானம் – அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!
Thursday, August 26th, 2021
ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் விநியோக வலையமைப்பு முடங்கியுள்ளதால், பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் போக்கு உள்ளதாகவும் முடக்கல் நிலை காரணமாக நூல் அறுந்த பட்டத்தைப் போன்று பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதாகவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலைமையில், மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் இடமளிக்க முடியாது எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொருளாதார சரிவு: மத்திய வங்கியின் அதிரடி முடிவு!
அவதானமாக செயற்படவில்லை என்றால் இந்தியா போன்று இலங்கையிலும் மோசமடையும் - வைத்திய பரிசோதனை நிறுவனத்தின...
அரச நிறுவனங்களில் காகித பயன்பாட்டை குறைக்க திட்டம் - பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற...
|
|
|


