ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் – அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, February 15th, 2022
ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.
“பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகளை குறைப்பதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதல்” என்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து வர்த்தக அமைச்சர் தலைமையிலான குழுவொன்று நிவாரணம் வழங்குவது தொடர்பான தீர்மானத்தை பரிசீலித்து பரிந்துரையை வழங்கிய நிலையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சபாநாயகர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!
ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிரடி உத்தரவு - கதி கலங்கும் உலக நாடுகள்!
மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல சேர்த்துக்கொள்ளுமாற...
|
|
|


