ஒரு இலட்சத்துக்கு அதிக மாத சம்பளம் பெறுவோரிடம் 5 வீத வரி அறவிட வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

ஒரு இலட்சத்துக்கு அதிக மாதாந்த சம்பளம் பெறும் அனைவரிடமிருந்தும் 5 வீதம் வரி அறவிடப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர் கல்வி மற்றும் சுகாதார போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்கு இந்த வரி பயன்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இந்த வரி சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பாக குறிப்பிடப்படலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுச் சேவைகளை நடத்திச் செல்ல பொது மக்களின் மாதாந்த வருமானத்தில் 5 வீதம் வரி அறவிட வேண்டும் என பந்துல தெரிவித்துள்ளார்.
இதேநேரம் வருமான மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் சராசரியாக ஒரு இலட்சத்திற்கு மேல் மாத வருமானமுள்ள அனைவரிடமிருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
ஏராளமான இலங்கையர்கள் தங்கள் குழந்தைகளுக்காக சர்வதேச பாடசாலைகளில் சேர்த்து அதற்காக பணம் செலுத்துகின்றனர்.
அதேபோல், தனியார் மருத்துவமனைகளிலும் பலர் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கிறார்கள்.
அவர்களும் உரிய வரி செலுத்த வேண்டுமா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|