ஒருமித்த செயற்பாடே அவசியம் – ஜனாதிபதி!
Saturday, June 29th, 2019
மக்கள் பிளவடைந்து தனித்தனியாக செயற்பட்டால், நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒழுக்கப் பண்பாட்டையும் அமைதியையும் கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும்.
நாட்டில் இன ரீதியாக பிரிந்து வேறுபட்டு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வது எந்தவொரு இனத்திற்கும் நல்லதல்ல. நாட்டின் அனைத்து இனங்களும் சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் வாழக்கூடிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
பாதுகாப்பற்ற வாகனங்கள் இறக்குமதிக்கு தடை!
சர்வதேச தரப்பின் தலையீட்டுக்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு உள்ளக பொறிமுறையை பயன்படுத்துவதே சிறந்தது –...
வடக்கிலும் தெற்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த துறைச...
|
|
|


