ஒதுக்கப்பட்ட 6893 கோடி ரூபா நிதி செலவிடப்படவில்லை!

முதல் மூன்று காலப்பகுதிக்காக 51 அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6893 கோடி ரூபா பணம் செலவிடப்படவில்லை என நாடாளுமன்றிற்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியே பயன்படுத்தப்படவில்லை. அத்துடன், பாதுகாப்பு அமைச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலும் 1010 கோடி ரூபா செலவிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சுகாதார அமைச்சு 663 கோடி ரூபாவினையும், கல்வி அமைச்சு 752 கோடி ரூபாவினையும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு 420 கோடி ரூபாவினையும், மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு 439 கோடி ரூபாவினையும் செலவிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை !
வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் - மத்திய வங்கி தெரிவிப்பு!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணை - மீண்டும் வீதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க தயாராகும் துறைசா...
|
|