ஒக்டோபர் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டம்!
Sunday, May 26th, 2024
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றையதினம் ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தீர்மானம் மிக்க வலுவான கட்சியாக செயற்படும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சர்வதேசம் ஒன்றிணைய வேண்டும்! - ஜனாதிபதி
மலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு !
அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு எனது அரசாங்கம் மேற்கொண்டு வரும் பணிகள்...
|
|
|


