ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Wednesday, March 27th, 2024
அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அரசியயலமைப்பிற்கு அமைவாக, எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்..
காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மகிந்த தலைமையிலான கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு குறைந்த சம்பளமாக 300 டொலர்கள் – அமைச்சரவைக்கு யோசனை!
உமா ஓயா திட்டத்தை தடை செய்யுமாறு கோரி சத்திய கடதாசி!
போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையே தீர்வு - அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்து!
|
|
|


