ஒக்டோபர் மாதத்தில் 20,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை – ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்ப்பு!
Sunday, October 23rd, 2022
ஒக்டோபர்மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ,குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது.
அதனடிப்படையில் 20,000 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என பள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையில் மொத்தம் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அக்டோபர் 1 முதல் 7 வரை 8 ஆயிரத்து 614 சுற்றுலாப் பயணிகளும், அக்டோபர் 08 முதல் 14 வரை 9 ஆயிரத்து 125 சுற்றுலாப் பயணிகளும், அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் திகதி 2 ஆயிரத்து 834 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை வந்துள்ளனர்.
இந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலா துறையின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா காணப்பட்டுள்ளதுடன் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலா பயணிகளில் 20% மானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
அதைத் தொடர்ந்து ரஷ்யா 14 சதவீதத்தையும், இங்கிலாந்து 10 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எண்ணியிருந்த பொழுதிலும் 8 இலச்சம் பேர் மட்டுமே வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடததக்கது.
Related posts:
|
|
|


