ஒக்டோபர் மாதத்திற்குள் பணவீக்கம் 4-6 சதவீதமாக குறைவடையும் – மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

ஒக்டோபர் மாதத்திற்குள் பணவீக்கம் 4-6 சதவீதமாக குறைவடையும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, பணவீக்கம் முன்னறிவிக்கப்பட்டதை விட வேகமாக குறைய வாய்ப்புள்ளதாக நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்க விகிதத்தை விரும்பத்தக்கதாகக் குறைக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என அவர் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 70 சதவீதமாக உச்சத்தை எட்டிய பணவீக்கம், படிப்படியாக குறைந்து வருகிறது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி பெப்ரவரியில் பணவீக்கம் 50.6 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அதிகரிக்கிறது கொரோனா வைரஸ் தாக்கம்: எதிர்கொள்ள தயாராகிறது யாழ் போதனா வைத்தியசாலை – பணிப்பாளர் சத்தி...
இரண்டு வாரங்களில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!
இலங்கையில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள் - மின்சார நுகர்வோர் சங்கத்தி...
|
|