ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் திங்கள் ஆரம்பம் – இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் சிறப்பான பதிலளிக்கப்படும் என அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
 Saturday, February 26th, 2022
        
                    Saturday, February 26th, 2022
            
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 03 உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு இம்மாதம் 28முதல் ஏப்ரல் முதலாம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார்.
இந்நிலையில், இலங்கை தொடர்பான உரையாடல் எதிர்வரும் மார்ச் 03 இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விஷேட பிரதிநிதிகள் குழு நேற்றையதினம் ஜெனிவா சென்றடைந்தது.
மேலும் இலங்கை தொடர்பான அறிக்கை ஏற்கனவே அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அதற்கு பதிலளித்து உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        