ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தியது சீனா!

Friday, March 5th, 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங்கைக்கு வழங்குவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹோன, சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் லூ ஸஹொஹியை சந்தித்தபோதே அவர் இலங்கை தூதுவரிடம் சீனாவின் உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.

அத்துடன் பீஜிங்கில் உள்ள தூதுவருக்கு சீனா தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேச அரங்கில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு, கொரோனா தொற்றின் பின்னரான பொருளாதார நிலைமைகள், செயற்திறன்மிக்க கொரோனா பரவல் கட்டுப்பாடு மற்றும் எதிர்கால உயர்மட்ட விஜயங்கள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு சீனாவின் ஆதரவையும் பிரதி வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ள சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான சீனாவின் சுற்றுலாத்துறை, வர்த்தகங்கள், கொழும்பு துறைமுக நகர மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலய முதலீடுகள் என்பனவற்றுக்கான ஆதரவையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மத்திய வங்கியின் சுற்றுநிருபங்களை மீறி செயற்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறித்து முறைப்பாடு வழங...
நேர்மறையான மாற்றத்திற்கு ஊடகவியலாளர்கள் தயாராக வேண்டும் – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அழைப்பு!
விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப...