ஐ.நா. சபையில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
Tuesday, March 8th, 2022
நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் கணிசமான முயற்சிகளுக்கு உலகில் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவு வழங்கியது என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பு குறித்து அவர்கள் பாராட்டியாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை கடுமையான முரண்பாடுகள் மற்றும் பலவீனங்களைக் காட்டுவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


