ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு 69 பொலிஸ் உத்தியோகத்தர்கள்!
Thursday, April 11th, 2019
இலங்கையின் 69 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இணைவதற்கு தகுதி பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
கடந்த 02ம் திகதி இடம்பெற்ற தெரிவுப் பரீட்சையில் இந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், மகளிர் பிரதம பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் சார்ஜென்ட்கள் உள்ளிட்டவர்கள் இதில் தகுதி பெற்றுள்ளனர்.
இது சம்பந்தமான பரீட்சைக்கு 250 பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமர் ரணில் இந்தியா விஜயம்!
பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் :ஆராய்கிறார் பிரதமர் ரணில் !
வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்றுமுதல் சட்ட நடவடிக்கை - பொலிஸ் போக்குவரத்து தல...
|
|
|


