ஐரோப்பிய குழுவினர் இன்று இலங்கை வருகை!
Monday, October 31st, 2016
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளின் நல்லுறவுக்கான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன்லம்பேர்ட் (Ms.Jean Lambert) தலைமையிலான ஐரோப்பிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இலங்கை வரவுள்ளனர்.
அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர் நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயவிருக்கிறார்கள்.
ஐரோப்பிய பாராளுமன்ற குழுவினர் கொழும்பு திருகோணமலைஇ மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சென்று மக்கள்பிரதிநிதிகளையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்திக்கவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன்திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களையும் இவர்கள் பார்வையிடஉள்ளனர்.
அரசியல்இ பொருளாதாரம் மகளிரை வலுவூட்டல் போன்ற விடயங்கள் பற்றியும் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை வழங்க தேவையான பின்னணிகளை ஏற்படுத்துவது இந்தக் குழுவின் மற்றுமொருநோக்கமாகும்.
Related posts:
புங்குடுதீவுப் பெண்ணுடன் பேருந்தில் பயணித்தோர் அச்சமின்றி விபரங்களை தாருங்கள் - யாழ்.அரச அதிபர் அவ...
கல்கிசை - காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையின் புதிய தொடருந்து இன்று யாழ...
நீண்ட வார இறுதி விடுமுறை - நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தமது பாதுகாப்பு தொடர்ப...
|
|
|



