ஐரோப்பிய ஆணைக்குழுவால் இலங்கைக்கு 38 மில்லியன் யூரோ உதவி!
Wednesday, March 16th, 2016
இலங்கையின் கிராமப்புற பகுதிகளில் வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக 38 மில்லியன் யூரோகளை வழங்க ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாகவும் இதற்காக ஐரோப்பிய ஆணைக்குழுவின் சர்வதேச மற்றும் அபிவிருத்தி ஆணையாளர் மிமிகா மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அபிவிருத்தி துறையில் இலங்கையுடன் மிக நீண்டகால தொடர்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடவுள்ளதாகவும் யுத்ததாலும்,சுனாமியாலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கி மீண்டும் கட்டியெழுப்புவது ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான நடவடிக்கையாகவெ இது வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கையுடன் நெருக்கமாகும் ஐரோப்பா - இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை!
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் - மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை!
பாடசாலை மாணவர்களுக்கான போசாக்குள்ள உணவு வழங்கல் திட்டம் தொடர்பில் ஊடகங்கள் மக்களுக்கு தெரிவிக்க வே...
|
|
|


