ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் – சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் மரியா பெர்ணான்டா கர்சா இலங்கை வருகை!.
Thursday, October 19th, 2023
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் மரியா பெர்ணான்டா கர்சா (Maria Fernanda Garza) நேற்று இலங்கை வந்தடைந்தார்.
அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் பிரிவு உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் அவரது விஜயத்தின் போது, நாட்டின் சுற்றுலாத்துறை, பொருளாதார முன்னேற்றம் என்பன தொடர்பில் அவதானம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதற்தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
20 வருடங்கள் ஆசிரியப் பணி புரிந்த பலரும் உள நெருக்கீடுகளால் ஓய்வுபெறும் அவலம் - தமிழர் ஆசிரியர் சங்...
பிரிட்டனில் பிரபல்யம் பெற்ற இலங்கை உணவுகள்!
14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!
|
|
|


