ஐந்தாண்டு விடுமுறை சுற்றறிக்கை ஆசிரியர்கள், சுகாதார துறையினருக்கு பொருந்தாது – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

அரச ஊழியர்கள் ஐந்தாண்டு கொடுப்பனவு இல்லாத விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை, பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் நிபுணர்கள் போன்ற பிரிவினருக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நீண்ட கால விடுமுறைக்கான சுற்றறிக்கையை அரசாங்கம் பல்வேறு நிறுவனங்களில் உள்ள மேலதிகமான ஊழியர்களை விடுவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே, நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு இது பொருந்தாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தாம் தற்போது இந்த சுற்றறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார்- பிரதமர் அறிவிப்பு!
கப்பலை விடுவிக்க கப்பம்?
பேருந்து முன்னுரிமை வீதிகளில் குறித்த வாகங்களை தவிர்ந்த வேறு வாகனங்களை செலுத்த முடியாது - சாரதிகளுக்...
|
|