ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இலங்கையுடன் உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும்!
Tuesday, February 21st, 2017
இலங்கையில் நீதி, உண்மைக்கான பொறிமுறையுடன் தொடர்புடைய உயிரச்சுறுத்தல்களை எதிர்நோக்குபவர்களை தமது நாடுகளுக்கு வரவழைப்பதற்கான உடன்படிக்கையை இலங்கையுடன் ஐக்கிய நாடுகளின் உறுப்புநாடுகள் செய்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக்கோரிக்கையை சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34 வது அமர்வு நடைபெறவுள்ளநிலையில் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படும்போது ஐக்கிய நாடுகள்சபை இலங்கைக்கு தொழில்நுட்பரீதியாக மற்றும் நீதியடிப்படையில் உதவியளிக்கவேண்டும். இதன்போதே தீர்வின் பின்னர் பிரச்சினைகள் மீண்டும் எழாமையை உறுதிசெய்யமுடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts:
யாழ். நீதிமன்றக் கட்டத் தொகுதி தாக்குதல் வழக்கு ஒத்தி வைப்பு!
நாட்டில் அதி வேகமாகமாக பரவும் டெல்ரா தொற்று : ஒரேநாளில் 94 பேர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு சுகாதாரப...
நிதி கையாடல் தொடர்பில் விவசாயிகள் முறைப்பாடு - ஒரு வாரத்திற்குள் கணக்காய்வுக்கு உட்படுத்தி அறிக்கை ...
|
|
|


