ஐக்கிய இராச்சியத்திலிருந்தான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – வெளிநாட்டு அமைச்சு அறிவிப்பு!

ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக பயணத்தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
ஐக்கிய இராச்சியத்தில் நிலவும் மாற்றமடைந்த புதிய கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக பயணத் தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்பட்டு, ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் அறிமுகப்படுத்திய வழிகாட்டுதலின் கீழ் ஐக்கிய இராச்சியத்திலிருந்தான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|