ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி – ஜனாதிபதி ரணிலுடன் தொலைபேசியில் கலந்துரையாடல்!

Wednesday, August 3rd, 2022

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட், இலங்கையை ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை நோக்கி இட்டுச் சென்று, நாடு எதிர்நோக்கும் நிலைமைகளை வெற்றிகொள்ள தற்போதைய ஜனாதிபதிக்கு முடியும் என வாழ்த்தியுள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: