ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் !
Monday, November 18th, 2019
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ருவான்வெலி மண்டபத்தில் இருந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Related posts:
44 விசாரணைகள் நிறைவு!
இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
ஒவ்வொருவரது கருத்தக்களுக்கும் ஆராயப்பட்டு அவை குறித்து இணக்கமான தீர்வை எட்டி கூட்டணி அரசாக முன்னோக்க...
|
|
|


