ஏற்றுமதி செய்யும் நோக்கில் எள்ளு பயிரிடத் திட்டம்!
Friday, June 29th, 2018
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்த வருடம் மாத்தளை மாவட்டத்தில் 500 ஹெக்டயர் காணியில் எள்ளு பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தம்புள்ளை, கலேவெல, லக்கல ஆகிய பகுதிகளில் நீர்வளமும், நிலமும் காணப்படுகின்றது.
அத்துடன், இந்த துறையில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் விவசாய நடவடிக்கையில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், உற்பத்தியாளர்களுக்கு தேவையான தொழில் நுட்ப அறிவு மற்றும் பயன்தரக்கூடிய விதைகளும் பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அத்தியவசியமான 47 வகை மருந்துகளின் விலை குறைப்பு!
சபை முதல்வராக தினேஷ் குணவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றார்!
ஜூலை 15 முதல் வடக்கு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம் - தொடருந்து திணைக்களம் நம்பிக்கை!
|
|
|


