இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, February 10th, 2023

இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே, 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை, உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து நிதியுதவி உத்தரவாதங்களைப் பெறுவதுடன், உள்நாட்டுச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டவுடன், இலங்கைக்கான கடன் ஏற்பாட்டை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதலுக்காக முன்வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்தியா, பாரிஸ் கிளப், பிணை முறியாளர்கள் உட்பட்ட இலங்கைக்கு கடன் கொடுனர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் இலங்கையின் கடனில் 52 வீதத்தைக்கொண்டுள்ள சீனா மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு பொருத்தமற்ற இரண்டு வருட கடன் கால அவகாசத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: