ஏப்ரல் 2, 3, 6ஆம் திகதிகளில் சகல மருந்தகங்களைத் திறக்க அனுமதி – சுகாதார அமைச்சு!

Wednesday, April 1st, 2020

அவசர தேவைக்குரிய மருந்துகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக நாளை ஏப்ரல் 2ஆம் திகதி மறுநாள் 3ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி ஆகிய தினங்களில் அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தினங்களில் அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு அனுமதியளித்திருப்பதாக பொலிஸ் மா அதிபருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி, கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்சவிடம் அனுமதி பெற்றுள்ளார் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்

Related posts: