ஏப்ரல் மாதம் 8 முதல் 10 திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு!
Thursday, March 12th, 2020
எதிர்வரும் பொது தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8,9 மற்றும் 10 திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவள்ளன.
எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர், அரச ஊழியர்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
ஆசிரிய உதவியாளர்களின் அவல நிலை!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்...
மின்னணு மண் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம்!
|
|
|


