எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின் இரண்டாம் பாகம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கையளிப்பு!
Tuesday, April 11th, 2023
தேசிய எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின் இரண்டாம் அலகு இன்றையதினம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரியவினால் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக தற்போது 8 ஆயிரமாக உள்ள உள்ளூராட்சிமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டது.
அந்த குழுவின் தொழில்பாடுகள் இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் நிறைவு பெறவிருந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைகளால் அதன் தொழில்பாடுகளை நிறைவுறுத்த முடியாது போனது.
எவ்வாறாயினும், தேசிய எல்லை நிர்ணய குழுவின் காலம் எதிர்வரும் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சர் மங்கள - மிலேனியம் குழுவினர் சந்திப்பு!
இன்று சர்வதேச சிறுவர் தினம்!
அடுத்த வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை - 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்துவதற்கு கல்வி ...
|
|
|


