எல்லை நிர்ணய அறிக்கை 27ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது!
Friday, December 23rd, 2016
புதிய தேர்தல் எல்லைகளை நிர்ணயம் செய்யும் ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி நிச்சயமாக உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கும் இடையில் நேற்று(22) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். புதிய எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதுடன் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும் நடவடிக்கை கால தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்ற அமைச்சரினால் இந்த அறிக்கை பற்றிய விபரங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கர்ப்பிணியான விரிவுரையாளர் மரணம்: சந்தேகநபர் ஒருவர் கைது!
சொல்வதை செய்வோம்! செய்வதைதான் சொல்வோம்!! – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
எதிர்வரும் கல்வியாண்டில் முதலாவது தாதியர் பல்கலைக்கழகம் – மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


