எலிக்காய்ச்சலால் 2500 பேர் பாதிப்பு!
Saturday, July 30th, 2016
நாட்டில் 2016 இன் இதுவரையான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தொற்றினால் இதுவரையில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார். எலிக்காய்ச்சல் காரணமாக நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சேற்று நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் தொழில்புரிவோருக்கு எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
10 இந்திய மீனவர்கள் கைது!
புதிய தொழில்நுட்பத்தினூடாக சுங்க நடவடிக்கைகளை நவீன மயப்படுத்த திட்டம்!
பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெ...
|
|
|


