எரிவாயு கப்பல் வருவதில் மேலும் 3 நாட்கள் தாமதம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

இலங்கைக்கு நாளை (6) வரவிருந்த 3,700 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பல், மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி குறித்த கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது. இதற்கு மேலதிகமாக எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதுடன், அதன் முதல் தொகுதி எரிவாயு கையிருப்புகள் இவ்வாறு இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொறுப்புக்கூறலை பாதிக்கும் வகையில் எந்த நெருக்கடியும் இல்லை - பிரதியமைச்சர் கரு பரணவிதாரண!
மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் !
வருகின்றது மலேரியா நோய்க்கு தடுப்பூசி!
|
|