எரிவாயு இறக்குமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படும் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Wednesday, June 22nd, 2022
நாட்டுக்கு 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
இதனூடாக எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இடைக்கால பாதீட்டில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு டெங்கு தொற்று அச்சுறுத்தல் அதிகரிப்பு !
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு - வளிமணிடலவியல் திணைக்களம் அறிவிப்...
கடவுச்சீட்டு மோசடி – தொடர்ந்தும் பலர் கைது!
|
|
|


