எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Tuesday, February 22nd, 2022
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
“உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் பதற்றத்தை ஒட்டி, உலக எண்ணெய் விலையில் கூர்மையான அதிகரிப்பு உள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இந்த எரிபொருட்களை விநியோகம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. அத்தகைய மாற்றம் ஓரளவுக்கு நிகழ வாய்ப்புள்ளது.
அதில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. ஆனால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்தால், அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தாய்மாருக்கானதாக மாறிவரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முன...
ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்?
|
|
|


