எரிபொருள் விலைச் சூத்திரம் 1 ஆம் 15ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்படாது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
 Tuesday, November 8th, 2022
        
                    Tuesday, November 8th, 2022
            
எரிபொருள் விலைச் சூத்திரம் ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் இரவோடு இரவாக எரிபொருள் விலை அறிவிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததாக கனிய எண்ணெய் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட திகதிகளில் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து அமைச்சர் இதனைச் செய்வதற்கு சம்மதித்ததாக இந்தச் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவோதுன்ன தெரிவித்துள்ளார்.
குறித்த நாளில் எரிபொருள் விலைச் சூத்திரத்தை அமுல்படுத்தச் செல்லும் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வராததால் எரிபொருள் விநியோகஸ்தர்கள் அசௌகரியம் அடைவதுடன் நுகர்வோரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
எரிபொருளின் விலையைக் குறைப்பதற்கும் அதிகரிப்பதற்கும் அரசாங்கம் இரண்டு நாட்களைக் குறிப்பிட்டு, நள்ளிரவில் விலையை அதிகரிக்க ஒப்புக்கொண்டபோது, அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        