எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.

சகல ஊழியர்களும் உரிய முறையில் சேவைக்கு திரும்பியுள்ளார்கள் என்றும் தற்சமயம் எரிபொருள் வழமைபோன்று விநியோகிக்கப்படுவதாகவும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் மொஹான் செனெவிரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல எரிபொருள் நிலையங்களுக்கும் இன்றிரவு பத்து மணியளவில் எரிபொருளை விநியோகிப்பது இலக்காகும். நாட்டின் நாளாந்த பெற்றோல் மற்றும் டீஸல் தேவை ஏழு லட்சம் லீற்றர்களாகும். இந்த இலக்கை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இன்று காலை 6 மணிக்கு கொலன்னாவை – முத்துராஜவெல மத்திய நிலையங்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமான பௌஸர்கள் அனுப்பப்பட்டுள்ளன. காலி மாத்தறை எரிபொருள் களஞ்சியங்களிலிருந்தும் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் நுவரெலியா பிரதேசங்களுக்கு ரயில் மூலம் எரிபொருள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Related posts:
|
|