எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க அமைச்சர் வழங்கிய கைப்பேசி இலக்கம்!
Wednesday, March 30th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், தமக்கு அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே கோரியுள்ளார்.
இது தொடர்பில் தமக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்குமாறும் அமைச்சர் தனது தொலைபேசி இலக்கத்தையும் ஊடகவியலாளர்களிடம் முன்வைத்தார்.
இதன்படி, 077-7414241 என்ற கைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு குறித்த பிரச்சினை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும், அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் வாரத்திற்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் தொழிற்சங்க போராட்டம் துரதிஸ்டவசம...
சிறைச்சாலையில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் - சிறைச்சாலை...
ஈரானின் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து இலங்கைக்கான எதிர்ப்பு வெளியிட்ட இஸ்ரேலிய தூதுவர்...
|
|
|


