எரிபொருள் நெருக்கடி – தற்காலிகமாக மூடப்படுகின்றது வவுனியா தாதியர் கல்லூரி!
Friday, July 1st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வவுனியா தாதியர் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த கல்லூரி இன்றுமுதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் எரிவாயு பற்றாக்குறை காரணமாக சமையல் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
அத்துடன், பகல் வேளையில் மின்சாரம் தடைப்படுவதால் மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் கற்பித்தல் நடைமுறை என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். பல்கலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பம்!
இலங்கை எப்போதும் பாகிஸ்தானை உண்மையான நண்பராக கருதுகிறது - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கிறது வ...
|
|
|


