எரிபொருள் நெருக்கடிக்கு இன்னும் சில நாள்களில் தீர்வு – அமைச்சர் காமினி லொகுகே உறுதியளிப்பு!
Sunday, March 6th, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆகவே எரிபொருள் நெருக்கடி இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொதுமக்கள் இன்றும் ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காணமுடிந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முச்சக்கரவண்டியில் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட்: ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுல்!
கட்சித்தலைவர்கள் கூட்டம் ஆரம்பம் !
எதிர்காலச் சந்ததியினருக்காகவே, இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம் - உ...
|
|
|


