எம்.பி.க்கள் குறித்து விபரம் திரட்டும் பெப்ரல்!
Tuesday, May 9th, 2017
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யாரென அறிவதற்காக, 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பு தெரிவித்துள்ளது.
தகவலறியும் சட்டத்தைக் கொண்டு, இந்தத் தகவல்களைத் திரட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவ்வாறான, இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் இருப்பின், அவர்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தவுள்ளதாகவும்அவ்வமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்தார்.
Related posts:
இலங்கையின் பணவீழ்ச்சி குறித்து விசேட ஆராய்வு!
வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட்டு பொதுமக்கள் பொருள்களை வழங்கவேண்டும்...
பரீட்சைகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்து!
|
|
|


