எம்.ஜி.ஆரின் நினைவுதினம் திட்டமிட்டவகையில் இடைநிறுத்தம் – ஏற்பாட்டாளர்கள் வருத்தம்!

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மறைந்து 30 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அரசியல் நோக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் மறைந்த 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வகள் இன்றையதினம் அனைத்துலக சமூக சேவைகள் நற்பணி பொதுப்பணி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததாகவும் இருந்தபோதிலும் உரிய காரணங்கள் கூறப்படாத நிலையில் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த நிகழ்வின் தடைக்கான காரணம் அரசியல் உள்நோக்கமாக இருக்கலாம் என்றும் இதுவிடையம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமானது என்றும் ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கல்வி அமை...
விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை - புரட்சிகரமான மாற்றம் நிச்சயம் செய்யப்படும் - ஜனாதிப...
|
|