எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தேர்தல் ஆணைக்குழு தயார் !
Tuesday, December 13th, 2016
வரும் வெள்ளிக்கிழமைமுதல் 2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. புதிய வாக்காளர் இடாப்புபில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 57 இலட்சமாகும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக வாக்காளரின் எண்ணிக்கை ஒரு கோடி 55 இலட்சத்து 44 ஆயிரத்து 491 ஆகும். வருடாந்த மக்கள் தொகை அதிகரிப்பு ஒன்று தசம் ஐந்து என்று குறிப்பிட்ட அவர் இதற்கமைவாக வாக்காளரின் எண்ணிக்கை வருடாந்தம் இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்தினால் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக உள்ளது. அடுத்த வருடத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை போன்று மூன்று மாகாண சபைக்கான தேர்தலும் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts:
யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை ஸ்தாபிப்பு!
நாட்டில் கொரோனா மரணம் அதிகரிப்பு!
திரிபோஷவில் எந்தவித நச்சுத் தன்மையும் இல்லை - ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு என திரிபோஷ நிறுவனம் உறுதி...
|
|
|


