எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, May 17th, 2024

பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாம் உட்பட கட்சியின் 99 வீதமான உறுப்பினர்கள் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அரசாங்கத்தின் செயற்திட்டங்களை தாங்கள் அங்கிகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டின் நலனுக்காக அரசாங்கத்தில் இருந்து விலகி செயற்படுவதற்கும் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: