எத்தகைய தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர் சுசில் அறிவிப்பு!

Friday, January 5th, 2024


எவ்வாறான தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், 

எதிர்கால கொள்கை முடிவுகள், திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் அமைச்சர் தலைமையில் நேற்று விசேட கூட்டம் இடம்பெற்றது.

அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வித்துறையின் அனைத்து துறைகளுடனும் நல்ல ஒருங்கிணைப்பை பேணுவது அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்

Related posts: