எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவில் வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை உருவாகும் – ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் அறிக்கை!
Friday, January 22nd, 2021
எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவிலேயே வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை இருக்கும் என ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒவ்வொரு 5 நபர்களுக்கும் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் அவர்களில் பெருமளவானோர் பெண்கள் என்றும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வயது முதிர்ந்தவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக, ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம், ஹெல்ப் எஜ் ஸ்ரீலங்கா அமைப்புடன் இணைந்து, பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை பொலிஸ் என பெயர் மாற்றம்!
சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!
சதொச நிறுவன ஊழல் மோசடி தொடர்பான ஆவணங்கள் தயார் – ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் வழங்கத் தயார் - நுகர்வ...
|
|
|


