எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பாடசாலை வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கை
Sunday, June 18th, 2017
எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பாடசாலை வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் இதனை தெரிவித்தார்
தற்போது பாடசாலைகளில் 39 மாணவர்கள் ஒரு வகுப்பறையில் அதிக பட்சமாக உள்வாங்கபடுகின்றனர்
அவர்களை 35 ஆக மட்டுப்படுத்தி ஏனைய மாணவர்களை அருகில் உள்ள பாடசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போது அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை என்ற திட்டத்தின் அடிப்படையில் சிறந்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்
Related posts:
SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களுக்கு தடை !
சேதன உரத்தை தயாரித்து பயன்படுத்துவற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு - கமத்தொழில் அமைச்சரின...
சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கை - வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வ...
|
|
|


