எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்!
Tuesday, October 5th, 2021
கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்க மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக தரம் 1 முதல் 5 வரை 3 ஆயிரத்து 884 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஏழு பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை!
ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில்: நிலைமைகள் தொடர்பில் தீவிர ஆலோசனை!
|
|
|


