எதிர்வரும் 2 வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

இதற்கமைய 15 இலட்சம் லீட்டர் திரவ உரம் அடுத்த வாரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2 வாரங்களில் கிடைக்கப்பெறவுள்ள உரத் தொகையுடன் இலங்கையில் நெல் பயிர்ச்செய்கைக்கு தேவையான முதலாவது நனோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதி போதுமானதாக இருக்கும் என வசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


சனத்தொகை, குடும்பக் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு...
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கையை பாதிக்காது - அமெரிக்கா அறிவிப்பு!
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் நவீன முறைமை - தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவ...