எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக்கட்டுப்பாடு நீடிப்பு – இராணுவ தளபதி அறிவிப்பு!
Sunday, July 4th, 2021
நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் பரவல் நிலைமை அதிகரித்து வந்ததன் காரணமாக மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதேவேளை, தற்போதைய நடமாட்டக்கட்டுப்பாடு தளர்வுகள் நாளைமுதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, 19 ஆம் திகதியின் பின்னரே மீளவும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்க நடவடிக்கை!
பாடசாலைகள் முழுமையாக இயங்க வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
நசீர் அஹமட்டுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்காலத்தில் அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடமாக அ...
|
|
|


