எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளை பார்வையிடுவதற்கு வாரத்திற்கு ஒருவரை மாத்திரம் அனுமதிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
கைதிகளால் பெயர் வழங்கப்படும் நெருங்கிய உறவினருக்கு மாத்திரமே அவர்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது
முன்பதாக நாட்டை அச்சுறுதிய கொரோனா தொற்று சிறைக் கைதிகளையும் தாக்கியமை அடுத்து சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அதற்கான அனுமதி வழங்கப்படகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீன ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து!
ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு: யாழ்.நகரில் போராட்டம்!
எரிபொருள் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஐக்கிய அரபு இராச்சியத்த...
|
|