எதிர்வரும் 14ஆம் திகதி ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!.

ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அதிக இலங்கையர்கள் குவைத்தின் பொது மன்னிப்பு காலத்தில் நாடு திரும்பல்!
வரி விதிப்பு : விவசாயத்திற்கு கூடுதல் வருமானம்!
சிலோன் டீ யை சீனாவில் விற்பனை செய்ய இலங்கை – சீனா இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!
|
|