எதிர்வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு முறைமையை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் – ஐ. நா. உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் தெரிவிப்பு!
Thursday, June 9th, 2022
எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் வழமையான உணவு வழக்கம் குறைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு முறைமையை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
உலக உணவு பாதுகாப்பு தினத்திற்கு இணையாக அந்த வேலைத்திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரசாயன மற்றும் சேதன பசளை உள்ளிட்ட விவசாய இராயனங்களை இறக்குமதி செய்வதற்காக சர்வதேசத்திடம் உடனடியாக நிதியுதவியை பெற்றுக் கொள்ள இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்.குடாநாட்டு மக்களுக்கு வாழ்வியலை தேடிக்கொடுப்பதற்கு நாம் நடத்திய போராட்டங்கள் சொல்லில் அடங்கா...
உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட விவகாரம்: பிரதமர் ரணில் கண்டனம்!
உக்ரைனுக்க ஸ்வீடன் உதவி - கடுமையான எச்சரிக்கை விடுத்தது ரஸ்யா!
|
|
|


