எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்து!
Wednesday, January 5th, 2022
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் கல்வி நடவடிக்கைகளைச் சாதாரண நடைமுறைகளுக்கமைய முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தநிலையில், பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனையடுத்து, சில கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டிருந்தன
அத்துடன், பாடசாலையின் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
எனினும், புதிய நடைமுறைக்கமைய விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா மரணம்: இலங்கை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்த சர்வதேச மன்னிப்புச்சபை!
பெப்ரவரி மாத செலவுகளை ஈடுகட்ட தேர்தல் ஆணையம் 770 மில்லியன் கோருகிறது!
மாணவர்களின் உயர் கல்விக்கு 8 இலட்சம் வட்டியற்ற கடன் மீள ஆரம்பம் - நாளாந்த செலவுக்கும் 3 இலட்சம் - ந...
|
|
|


